பொழுதுபோக்கு
ஒரு சீரியல் நியூ எண்ட்ரியால் 2 சீரியல்கள் நேர மாற்றம்: ஜீ தமிழ் புதிய அப்டேட்!
ஒரு சீரியல் நியூ எண்ட்ரியால் 2 சீரியல்கள் நேர மாற்றம்: ஜீ தமிழ் புதிய அப்டேட்!
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் அவ்வப்போது, புதிய சீரியல்கள் ஒளிபரப்பு, மற்றும் பழைய சீரியல்களின் நேர மாற்றம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், வரும் திங்கள் (மார்ச் 17) முதல், ஜீ தமிழின் சில முன்னணி சீரியலிகளின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சேனல் தரப்பில் இருந்து புதுப்புது தொடர்களை ஒளிபரப்ப தொடங்கி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான மனசெல்லாம் மற்றும் கெட்டிமேளம் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வரிசையில் வரும் திங்கள் (மார்ச் 17) முதல் ராமன் தேடிய சீதை என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. கன்னடத்தில் வெற்றி பெற்ற சீதா ராமன் என்ற சீரியலின் டப்பிங் சீரியலாக இது ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் சனி வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிப்பரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இதுவரை மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாக வந்த மனசெல்லாம் சீரியல் இனி 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல், நானே வருவேன் சீரியல் இனி 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பிறப்பிலேயே சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையுடன் தனியாளாக வாழ்ந்து வரும் சீதையின் வாழ்க்கையில் ராமனின் வருகை எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது? ராமனின் வருகையால் சீதையின் வாழ்க்கை வண்ணமயமாகுமா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம். ஏற்கனவே கணவனை இழந்த ஒரு பெண், தனது பெண் குழந்தையுடன் வசித்து வரும்போது, ஹீரோ அவளை திருமணம் செய்துகொண்டதால் என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இதயம் சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பானது.ஜனனி அசோக்குமார் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த இதயம் சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அதேபோன்ற ஒரு கதைக்களத்துடன், ராமன் தேடிய சீதை என்ற பெயரில் ஒரு டப்பிங் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தகக்து. கன்னடத்தில் பலரின் பேவரைட் சீரியலாக இடம் பிடித்து வெற்றி பெற்ற சீரியலின் தமிழ் டப்பிங்கான ராமன் தேடிய சீதை சீரியல், ப்ரமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.