இலங்கை

கனடா நீதி அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி; மகிழ்ச்சியில் தமிழர்கள் !

Published

on

கனடா நீதி அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி; மகிழ்ச்சியில் தமிழர்கள் !

 கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி  (gary anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே ஹரி ஆனந்தசங்கரி  (gary anandasangaree) ஆவார்.

Advertisement

இலங்கையில் இருந்து தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து கனடா சென்றார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை ஆரம்பித்ததுடன், கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் ஹரி ஆனந்தசங்கரி (gary anandasangaree)  முன்னின்று செயற்பட்டுள்ளார்.

Advertisement

இந் நிலையில், கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக ஹரி ஆனந்தசங்கரி  (gary anandasangaree) லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்தார்.

 கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்றைய தினம் பதவியேற்றார்.    புதிய அமைச்சரவை பதவியேற்பின் போது ஹரி அனந்தசங்கரி (gary anandasangaree) கனடாவின் நீதி அமைச்சராகவும், அட்டர்னி ஜெனரலாகவும், மற்றும் கிரவுன் – இனிஜினஸ் ரிலேஷன்ஸ் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version