இலங்கை

கலவரத்தில் முடிந்த இசை நிகழ்ச்சி

Published

on

கலவரத்தில் முடிந்த இசை நிகழ்ச்சி

ஹிங்குராக்கொடை திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மோதல்  சம்பவம்  தொடர்பாக மெதிரிகிரிய பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (14) இரவு திவுலங்கடவல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது  இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்திருந்த இரண்டு பாடகர்கள் கலந்து கொள்ளத் தவறியதால் இசை நிகழ்ச்சியின் கலவரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இசை நிகழ்ச்சி பிரபல பாடகர்கள் குழு பங்கேற்புடன் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டு , 1,000ரூபாய்  மற்றும் 2,500 ரூபாய்  மதிப்பில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

நேற்றிரவு இசை நிகழ்ச்சி தொடங்கியதாகவும், அதன்படி அறிவிப்பாளர் பங்கேற்க திட்டமிடப்பட்ட இரண்டு பாடகர்கள் இன்னும் வரவில்லை என அறிவித்துள்ளார்.  அதிகாலை 1.30 மணியளவில் இசை நிகழ்ச்சி முடிவடைவதாக அறிவித்த பிறகு, கூட்டத்தில் கலவரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் போது இசை நிகழ்ச்சியில் பயன்படுத்தபட்ட நாற்காலிகள் உட்பட சொத்துக்களும், இசைக்குழுவின் இசைக்கருவிகளும் சேதப்படுத்தபட்டுள்ளது.

Advertisement

சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக சுமார் 45 பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், அவர்களால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணையில், இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்குவதாக கூறிய தொகையை செலுத்தாததால், சம்பந்தப்பட்ட இரண்டு பாடகர்களும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version