இலங்கை
சாலி நழீம் எம்.பி இராஜினாமா – சபாநாயகர் அறிவித்தார்!
சாலி நழீம் எம்.பி இராஜினாமா – சபாநாயகர் அறிவித்தார்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாலி நழீம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று (15) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தான் பதவி விலகுவதாக சாலி நழீம் நேற்று (14) விசேட உரையொன்றை நிகழ்த்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.