சினிமா

தளபதி சினிமாவிலிருந்து விலகியது வருத்தமாக உள்ளது….! பிரபல கிரிக்கெட் வீரர் ஓபன் டாக்!

Published

on

தளபதி சினிமாவிலிருந்து விலகியது வருத்தமாக உள்ளது….! பிரபல கிரிக்கெட் வீரர் ஓபன் டாக்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின்னராக விளங்கும் வருண் சக்கரவர்த்தி, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது, “நான் விஜயின் மிகப்பெரிய ரசிகன் என்றதுடன் அவரைத் தனக்குப் பிடிக்கும்” எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது , விஜயைக் கற்பனை செய்து இரண்டு மூன்று ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.எனினும் அவர் இப்போது சினிமாவை விட்டு விலகியது எனக்கு வருத்தமாக உள்ளது எனத் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.வருண் சக்கரவர்த்தி சிறந்த கிரிக்கெட் வீரராக காணப்பட்டாலும் அவர் முன்னதாக சினிமா துறையில் பணியாற்றியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததொன்று. மேலும் தளபதி விஜய் தற்போது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் வருணின் இந்தக் கருத்துக்கள் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வருண் சக்கரவர்த்தி எழுதிய ஸ்கிரிப்ட் உண்மையில் விஜயை அடையும் வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி  ரசிகர்களுக்கிடையே உருவாகியுள்ளது. “விஜயை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பதே ஒரு கனவு. ஆனால் அது நிறைவேறுமா?” என்று வருண் சக்கரவர்த்தி மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளார்.வருண் சக்கரவர்த்தியின் இந்த பேச்சு தற்போது தளபதி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வீரர் ஒருவர் விஜயை இவ்வளவு ஈடுபாட்டுடன் பாராட்டுவது விஜயின் வெற்றியை  உறுதிப்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version