இலங்கை

திருமணத்திற்கு பின் ஆபாசமாக உரையாட கூடாது; நீதிமன்றம் உத்தரவு

Published

on

திருமணத்திற்கு பின் ஆபாசமாக உரையாட கூடாது; நீதிமன்றம் உத்தரவு

  திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது ‘எதிர்பாலின’ நண்பர்களுடன் ‘ஆபாசமான’ முறையில் உரையாட கூடாது என இந்தியாவின் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதனை , எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருகையில்,

Advertisement

விவாகரத்து வழங்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனைவி தனது ஆண் நண்பர்களுடன் அவளது பாலியல் வாழ்க்கை குறித்து ஆபாசமான முறையில் வாட்சப்பில் சாட் செய்ததை நீதிமன்றத்தில் கவனத்தில் கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தது.

Advertisement

அதாவது, திருமணத்திற்குப் பிறகு கணவரோ, மனைவியோ தங்களது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் ஆபாசமான உரையாடலில் ஈடுபட கூடாது. தனது மனைவி மொபைல் மூலம் இத்தகைய மோசமாக பேசுவதை எந்த கணவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்.

அதோடு திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் நண்பர்களுடன் மொபைல் மற்றும் பிற வழிகளில் உரையாடலாம். ஆனால் அந்த உரையாடல் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.

கணவரின் எதிர்ப்பு தெரிவித்தும் மனைவி தனது ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து மோசமாக உரையாடுவது நிச்சயமாக கணவருக்கு மனரீதியிலான கொடுமையை ஏற்படுத்தும்” என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

Advertisement

மேலும் கணவருக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு மனைவியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version