சினிமா

நடிகர் சூரி அப்பாவின் பயோபிக் விரைவில்…! இயக்குநர் யார் தெரியுமா..?

Published

on

நடிகர் சூரி அப்பாவின் பயோபிக் விரைவில்…! இயக்குநர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகனாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக கலக்கி வரும் நடிகர் சூரிக்கு வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை கொடுத்தது.இப் படத்தின் பின்னர் “படவா” ,”ஏழு கடல் ஏழு மலை “,” மாமன் ” போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.சாதாரண வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலையை பார்த்து இன்று இவ்வளவு பெரிய ஹீரோவாக மாறி இருக்கும் இவர் பல மாதங்களாக தனது அப்பா முத்துசாமியின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுக்க தீர்மானித்திருந்தார். பின்னர் ஒரு சில பிரச்சினைகளினால் தடைப்பட்டது.இந்த நிலையில் சூரி தற்போது மீண்டும் அந்த முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இதனை முழு நீள படமாக எடுக்காமல் வெப் சீரியலாக எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை ott தளத்தில் வெளியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது.இதனை சூரி நடித்து தயாரிக்கவுள்ளதாகவும் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளதாகவும் மற்றும் இப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக கயல் பட நடிகை ஆனந்தியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சூரி இந்த படத்தில் வயதான தோற்றத்தில் நாட்டுப்புற கலைஞராக நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version