இலங்கை

பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருட்டு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

Published

on

பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருட்டு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

டுபாயில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக FitsAir விமானத்தில் டுபாய்க்குச் சென்றபோது, ​​ மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரி உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவின் கைப்பைகளில் இருந்து கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபாய் திருடப்பட்டதாக கட்டுநாயக்க பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்தப் பணம் FitsAir விமானத்தின் பயண பெட்டியில் இருந்தபோது தொலைந்து போனதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

காணாமல் போன மொத்த தொகை 15,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 6,000 திர்ஹாம்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸரிடமும் கொழும்பு 03 இல் அமைந்துள்ள FitsAir கிளையிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர்களைத் தவிர, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அதே விமானத்தில் பயணம் செய்திருப்பதும், விமானம் செல்ல வேண்டிய இடமான டுபாயில் அவர்களின் பொருட்களை சோதனை செய்தபோது இந்தப் பணம் காணாமல் போனதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version