இலங்கை

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி

Published

on

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி

  கண்டி – மெனிக்ஹின்ன பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் உட்பட மூவர் நேற்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெனிக்ஹின்ன பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் பெண் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவரும் கண்டி அசலக்க மற்றும் கரந்தகொல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 34 வயதுடைய இரண்டு பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சமபவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெனிக்ஹின்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version