இலங்கை
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர் சாவு!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர் சாவு!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமவிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த லொறி ஒன்று நேற்று (14) காலை நாகலகமுவ பகுதியில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த வேளை வீதியின் இடது பக்கத்தில் நிறுத்தப்பட்டு லொறியை ஆய்வு செய்த போது, அதே திசையில் பயணித்த Freezer லொறியொன்று நிறுத்தப்பட்டிருந்த லொறி மீது மோதி விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் Freezer லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வீதியில் சென்ற மற்றொரு வாகனத்தின் சாரதி அவர்களுக்கு உதவவும் காயமடைந்த நோயாளிகளை அழைத்துச் செல்ல முன்வந்த போது, அதே திசையில் பயணித்த ஒரு கொள்கலன் லொறி மீண்டும் Freezer லொறி மீது மோதியது.
இதன்போது உதவிக்கு வந்த சாரதி, Freezer லொறியின் சாரதி, உதவியாளர் மற்றும் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட லொறியின் சாரதி ஆகியோரும் பலத்த காயங்களுடன் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பூஸ்ஸ, வடுகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய Freezer லொறியின் சாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த விபத்தில் சிக்கிய வாகனங்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் உப கட்டுப்பாட்டு நிலையத்தால் நாரம்மல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சதலங்கல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய கொள்கலன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.