சினிமா

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிய றியோ…!

Published

on

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிய றியோ…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருப்பவர்கள் தான் சிவகார்த்திகேயன் மற்றும் ரியோ ராஜ் “அமரன்” திரைப்படத்தின் பின்னர் சிவகார்த்திகேயனின் வெற்றி பல மடங்கு உயர்ந்துள்ளதுடன் ரியோ ராஜ் அவர்கள் பிக்போஸ் மற்றும் “ஜோ” படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டுள்ளனர். விஜய் டிவியின் தொகுப்பாளராக அறிமுகமாகிய இருவரும் தற்போது ஒரு பெரிய இடத்தினை வெள்ளித்திரையில் பிடித்துள்ளனர்.இந்த நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் றியோ சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது அவர் “சிவகார்த்திகேயன் அண்ணா முதல் முறை எனக்கு கால் பண்ணும் போது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நிறைய பேசினோம். அப்ப கடைசியா வைக்கும் போது, ‘பெருசா ஜெயிப்போம்’ என்று சொல்லிட்டு வச்சாரு. அதுக்கப்புறம் கிட்டத்தட்ட ஒரு 3, 4 வருஷம் நாங்க ரெண்டு பேரும் அப்பப்போ போன்ல பேசிப்போம். அப்போ நான் ஹீரோவா படம் பண்ணலாம்னு நினைச்சப்போ, நான் இருக்கேன் என்று நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்தார். அவர் மேல எனக்கு அது பயங்கரமான மரியாதையை உருவாக்கியது. நம்ம சும்மா ஒருத்தரை நல்லா பண்ணுங்க என்று வாழ்த்திட்டு கடந்து போவது வேற, ‘பெருசா ஜெயிப்போம் நல்லா பண்ணுங்க என்று சொல்லிட்டு, நல்லா பண்ற வரைக்கும் கூட இருக்கிறது வேற ” என கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version