சினிமா
விடாமல் துரத்தும் ரசிகர்..! தல அஜித் ஸ்டைலில் பேசிய நடிகை லாஸ்லியா..
விடாமல் துரத்தும் ரசிகர்..! தல அஜித் ஸ்டைலில் பேசிய நடிகை லாஸ்லியா..
இலங்கையில் சாதாரண செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து மிகவும் அருமையாக விளையாடினார். குறித்த நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளராக இருந்த இவர் நடிகர் கவினுடன் ஏற்பட்ட காதல் கிசு கிசுக்களினால் விமர்சனங்களிற்கு ஆளாகி வெளியேற்றப்பட்டார்.நீண்ட நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் “பிரெண்ட்ஷிப்”,”கூகிள் குட்டப்பா” போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த ஆண்டு வெளியாகிய “mr.housekeeping”,”gentle women” ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவ் இரண்டு படங்களும் சாதாரண வெற்றியை கொடுத்துள்ளது.இந்த நிலையில் தற்போது gentle women படத்திற்கான நேர்காணல் ஒன்றில் தனது ரசிகர் ஒருவர் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தினை கூறியுள்ளார். அதில் இவர் “எனக்கு புடிச்ச ஒரு பையன் இருக்காங்க அவன் எனக்காக gift எடுத்திட்டு வந்தான் நான் சொன்னேன் ஏன் இதெல்லாம் செய்றிங்க முதல்ல உங்களை பாருங்க படிங்க ” என சொன்னேன் என கூறினார்.இதற்கு இடையில் இயக்குநர் சேதுராமன் “குடும்பத்தை பாருங்க ” என கூறி கலாய்த்துள்ளார்.