நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 15/03/2025 | Edited on 15/03/2025
இந்தியில் சல்மான் கான் நடித்த‘மைனே பியார் கியா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாக்யஸ்ரீ. பின்பு மராத்தி, பெங்காலி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். தமிழில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவின் தாயார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து வெளியான தகவலில் இவர் சமீபத்தில் பிக்கில்பால்(Pickleball) விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு நெற்றியில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. பின்பு அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். காயம் மிகவும் ஆழமாக இருந்ததால் அவருக்கு 13 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையொட்டி ரசிகர்கள் அவர் பூரண குணமடைய வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.