இலங்கை
வீதியை கடக்க முற்பட்ட யாழ் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
வீதியை கடக்க முற்பட்ட யாழ் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் (14) வீதியை கடக்க முற்பட்ட வேளை ஹயஸ் வாகனம் மோதியதில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
விபத்தை அடுத்து , ஹயஸ் சாரதியை கைது செய்துள்ள மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.