இலங்கை

வௌிநாட்டுக்கு அனுப்புவதாக பலரிடம் பண மோசடி செய்த பெண் கைது

Published

on

வௌிநாட்டுக்கு அனுப்புவதாக பலரிடம் பண மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 1,340,000 ரூபா பண மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நேற்று (14) மாலை நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கொழும்பில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையின் போது, ​​நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக தெரிவித்து இவ்வாறு பண மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம், வெள்ளவத்தை, வாத்துவ, மீகஹவத்த, ஹபராதுவ மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version