உலகம்

41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தடை

Published

on

41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தடை

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பெலாரஸ், பூட்டான் மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement

பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்த தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு நிர்வாக மட்டத்தில் இருந்து கிடைத்த வரைவு அறிக்கை தகவலின்படி செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, முதல் குழுவில் உள்ள நாட்டினரின் விசாவை முழுமையாக ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது குழு பகுதி கட்டுப்பாடுகள் மற்றும் தடையை எதிர்கொள்கிறது. 

மூன்றாவது குழுவில் உள்ள நாடுகளுக்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement

முதல் குழுவில், ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய 10 நாடுகளின் குடிமக்கள் முழு விசா தடையை எதிர்கொள்ள நேரிடும். 

இரண்டாவது குழுவில் இடம்பெற்ற எரித்திரியா, ஹைட்டி, லாவோஸ், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் மீது சுற்றுலா, மாணவர் விசாக்கள் புலபெயர்வு விசா வழங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 

மூன்றாவது குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தான் உள்ளிட்டவை தங்கள் குறைபாடுகளை சரி செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version