உலகம்

அமெரிக்க மாநிலங்களில் சுழிக்காற்று : அவசரகால நிலை அறிவிப்பு!

Published

on

அமெரிக்க மாநிலங்களில் சுழிக்காற்று : அவசரகால நிலை அறிவிப்பு!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சுழிக்காற்று மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சுழிக்காற்று மற்றும் புயல் தாக்கி வருகிறது. 
 
இதன் காரணமாகப் பெருமளவான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
மிசோரியில் சுமார் ஒரு இலட்சம் பேர் மின்சாரமின்றி இருப்பதாகக் கண்காணிப்பு சேவை தெரிவித்துள்ளது. 
 
அத்துடன், ஆர்கன்சஸ், இந்தியானா, டெக்சாஸ் மற்றும் மிசிசிப்பி ஆகிய மாநிலங்களில் 10,000ற்கும் மேற்பட்டவர்களும், மிச்சிகனில் 70,000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 
 
இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக ஜோர்ஜியாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி, மிகுந்த அவதானத்துடனும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் ஜோர்ஜியாவின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version