சினிமா

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில்!

Published

on

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில்!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

Advertisement

58 வயதான அவர் தற்போது மருத்துவர்களின் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்பட்டது. 

Advertisement

இதை அடுத்து உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக சாய்ரா பானு தெரிவித்து இருந்தார். 

மேலும் சாய்ரா பானுவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உதவியதாக தகவல்கள் வெளியானது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version