இலங்கை
இரண்டு மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய ஹையேஸ் வாகனம்!..
இரண்டு மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய ஹையேஸ் வாகனம்!..
பளை முகமாலை இந்திராபுரம் A-9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களை ஹையேஸ் ரக வாகனம் இன்று மாலை (16) மோதித்தள்ளியது.
மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரு ஆண்களும், ஒரு யுவதியும் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பளை போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ப)