இலங்கை

கச்சதீவு திருவிழாவில் சங்கிலி திருட்டு : பெண் கைது

Published

on

கச்சதீவு திருவிழாவில் சங்கிலி திருட்டு : பெண் கைது

கச்சதீவு ஆலயத்துக்கு வந்த பெண் ஒருவரின் நான்கு பவுன் தங்கச் சங்கிலியை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பெண் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

விசாரணைகளின் போது, இந்த பெண் மாறுபட்ட விலாசங்களை கூறியதாகவும், இந்தப் பெண்  திருடுவதற்காகவே ஆலயத்துக்கு வந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அந்த பெண்ணை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version