சினிமா

டான்ஸ் ஜோடி டான்ஸில் கண்கலங்கிய VJ மணிமேகலை..! என்ன நடந்திருக்கும்?

Published

on

டான்ஸ் ஜோடி டான்ஸில் கண்கலங்கிய VJ மணிமேகலை..! என்ன நடந்திருக்கும்?

தமிழ் தொலைக்காட்சி உலகில் தனித்துவமான அங்கராக தனது இடத்தை நிலைப்படுத்திய VJ மணிமேகலை, சமீபத்தில் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள் மற்றும் எதிர்ப்புகளைப் பகிர்ந்துள்ளார்.அவர் அதில் கூறிய உணர்ச்சி பூர்வமான அனுபவம் நிகழ்ச்சியைக் காணும் அனைவரின் மனதையும் தொட்டுவிட்டது. “நான் எட்டு வருடங்களாக அங்கராக இருந்தாலும், சிலர் என்னை காமெடி நிகழ்ச்சியில் அங்கரிங் செய்ய முடியாது என்று கேலியாகக் கூறினார்கள். ஆனால், இன்று அவர்கள் என்னைப் புகழ்ந்து  கூறுகிறார்கள்!” என்று கூறிக் கண்கலங்கினார்.மணிமேகலை, தமிழ் தொலைக்காட்சி உலகில் அவரது தனித்துவமான குரல் மற்றும் நகைச்சுவையான கதை என்பவற்றால் பல மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர். இன்றைக்கு அவர் ஒரு முன்னணி அங்கராக உயர்ந்தாலும், அவரது பயணம் எளிதாக இருக்கவில்லை எனக் கூறி தனது மனநிலையை கூறிக் கண்கலங்கினார்.மேலும் தனது  திறமை, கடின உழைப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் தனது பெயரை தொலைக்காட்சி உலகில் எழுத்துக்களாக பதித்தேன் எனப் பெருமையாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்கள் மணிமேகலையின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுக்கு மிகுந்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version