பொழுதுபோக்கு

தனுஷ் படத்தில் நடிக்க ஆடிஷனில் தேர்வான சீரியல் நடிகை கோமதி பிரியா; வாய்ப்பை தவறவிட்டது ஏன்?

Published

on

தனுஷ் படத்தில் நடிக்க ஆடிஷனில் தேர்வான சீரியல் நடிகை கோமதி பிரியா; வாய்ப்பை தவறவிட்டது ஏன்?

விஜய் டிவியில் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’  சீரியல் நடிகை கோமதி பிரியா, தனுஷின் ‘அசுரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக தெரிவித்துள்ளார்.வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியா’அசுரன்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தயாரிப்பாளர் தானு தயாரித்தார்.  இந்த படத்தின் மூலம் மலையாள சினிமா நடிகை மஞ்சுவாரியர் முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அசுரன் படத்தில் பசுபதி, பிரகாஷ்ராஜ், கென்னடி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய வெக்கை என்ற குறுநாவலை தழுவி கதை அமைந்திருந்தது. இந்த படம் யாரும் எதிர்பாரத வகையில் வேகமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூலைக் குவித்து கவனம் பெற்றது. இந்நிலையில், தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் நடிக்க ஆடிஷனில் தேர்வான பிறகும், அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கோமதி பிரியா தெரிவித்துள்ளார். தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் அடிக்கடி டாப் 5 இடங்களில் இடம்பிடித்து, ரசிகர்களை ஈர்த்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் கதாநாயகி கோமதி பிரியா, தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக தெரிவித்துள்ளார். நடிகை கோமதி பிரியா ஆரம்பத்தில் தெலுங்கு டிவி சீரியல்கலில் நடித்து வந்தார். பின்னர், தமிழ் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கதாநாயகி மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கோமதி மீனா தனது எளிமையான நடிப்பால் குடும்ப ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.இந்நிலையில், சீரியல் நடிகை கோமதி பிரியா நேர்காணல் ஒன்றில், தனுஷ் நடித்த’அசுரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படத்தில் நடிக்க முடியாமல் தவறவிட்டடாகவும் கூறியுள்ளார். அசுரன் படத்தில் தனுஷின் இளம் வயது கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க ஆடிஷன் வைத்து கோமதி பிரியாவை இயக்குனர் வெற்றிமாறன் தேர்வு செய்தார் என்றும். ஆனால், அப்போது சீரியலில் தொடர்ந்து நடித்து வந்ததால் அசுரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன் என்று கோமதி பிரியா தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version