சினிமா
தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த பிரபல நடிகை…! திரையுலகில் ஏற்பட்ட மாற்றம்!
தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த பிரபல நடிகை…! திரையுலகில் ஏற்பட்ட மாற்றம்!
சமந்தா ரூத் பிரபு, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகை. தற்பொழுது சமந்தா தனது சினிமாப் பயணத்தில் புதிய கட்டத்தை எட்டியுள்ளார். பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று மக்களின் ஈர்த்துள்ள சமந்தா, இப்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்தை தனது சொந்த நிறுவனமான “ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்.”ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்” நிறுவனம் கீழ் உருவாகியுள்ள முதல் படம் “சுபம்”. பிரவீன் காந்த்ரேகுலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சமந்தாவின் தயாரிப்பில் வெளியிடுவதால் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் திரையுலகின் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சமீபகாலமாக தமிழ் , தெலுங்கில் தரமான கதைகளை வழங்கும் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அதிகரித்துவரும் சூழலில் சமந்தாவின் இந்த முயற்சி அவருக்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சமந்தா இப்படம் தற்போது ரிலீசுக்குத் தயாராகிவிட்டதாக அறிவித்துள்ளார். அவருடைய தயாரிப்பில் உருவான முதல் படமாதலால், இது தனக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதாகவும், படம் மிகுந்த நம்பிக்கையுடன் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “சுபம்” திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக படக்குழு கூறுகின்றது.இவரின் முதல் தயாரிப்பு முயற்சி வெற்றி பெறுமா?என்ற கேள்வி பல ரசிகர்களிடையே எழுந்துள்ளன. அத்துடன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.