சினிமா

திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏஆர் ரகுமான்.. அப்போலோ வெளியிட்ட அறிக்கை

Published

on

திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏஆர் ரகுமான்.. அப்போலோ வெளியிட்ட அறிக்கை

இசைப்புயல் நேற்றைய தினம் லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த செய்தி வெளியாகி ரசிகர்களை பேர் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. முதலமைச்சர் ஸ்டாலினும் எக்ஸ் தளத்தில் ஏ ஆர் ரகுமான் உடல் நலம் குறித்து பதிவிட்டு இருந்தார். அதோடு மருத்துவமனையையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

Advertisement

இந்த சூழலில் அப்போலோ மருத்துவமனை ஏ ஆர் ரகுமானின் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது நீரிழப்பு அறிகுறி இருந்த நிலையில் வழக்கமான பரிசோதனைக்கு பின்பு ஏஆர் ரகுமான் வீடு திரும்பி உள்ளதாக கூறியிருக்கிறார்.

மேலும் ஏ ஆர் ரகுமான் இப்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன் பிறகு தான் இப்போது அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.

மணிரத்தினத்தின் ரோஜா படம் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய ஏ ஆர் ரகுமான் எண்ணற்ற விருதுகளை பெற்றிருக்கிறார். அதுவும் ஆஸ்கர் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

Advertisement

அதோடு மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் மெய்சிலிர்க்கும்படி இசையமைத்திருந்தார். தொடர்ந்து ரசிகர்களின் செவிக்கு விருந்தாக அவரது இசை இன்னும் பல ஆண்டுகள் இருக்க வேண்டும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version