இலங்கை

துப்பாக்கிகளுடன் ஐவர் கைது!

Published

on

துப்பாக்கிகளுடன் ஐவர் கைது!

துப்பாக்கிகளுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் அஹுங்கல்ல, பல்லம, மாபலகம, மஹநான்னேரிய மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

Advertisement

அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (15) இரவு அம்பலாங்கொடை நகரில் சோதனை நடத்தப்பட்டது. 

இதன்போது ஒரு ரிவால்வர், அதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு தோட்டாக்கள் மற்றும் 9 மி.மீ தோட்டா ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட நபர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

Advertisement

அதேநேரம், ரஸ்நாயக்கபுர பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ரஸ்நாயக்கபுர – மகுரன்கடவல பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட நபர் பல்லம பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

இதற்கிடையில், பிடிகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று, பிடிகல – பெல்பிட்ட வத்த பகுதியில் ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த ஒரு சந்தேக நபரைக் கைது செய்தனர். 

Advertisement

கைது செய்யப்பட்ட நபர் மாபலகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார். 

இதற்கிடையில், அம்பாறை பொலிஸ் பிரிவின் திஸ்ஸபுர பகுதியில் நேற்று பிற்பகல் அம்பாறை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

Advertisement

கைது செய்யப்பட்ட நபர் அம்பாறை, திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

அத்துடன் கிடைத்த தகவலின் அடிப்படையில் நான்னேரியா பொலிஸ் பிரிவின் இகினிமிட்டிய வனப்பகுதியின் கட்டுவேவ பகுதியில் நான்னேரியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் சோதனை நடத்தப்பட்டது. 

அதன்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

Advertisement

கைது செய்யப்பட்ட நபர் மஹநான்னேரியவைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version