இலங்கை

பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ் ; விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்

Published

on

பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ் ; விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) புதிய குழுவினரை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு செலுத்தியுள்ளது.

இந்த இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் மட்டுமே தங்க திட்டமிடப்பட்டிருந்தது.

Advertisement

ஆனால் அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, அவர்கள் 9 மாதங்களுக்கும் மேலாக தங்க நேரிட்டது.

“புட்ச் மற்றும் சுனிதா ஆகிய இருவரும் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளனர்.

அவர்களை மீண்டும் அழைத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் கூறினார்.

Advertisement

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய குழுவினர் சென்ற 2 நாட்களில் சுனிதா மற்றும் புட்ச் பூமிக்கு தங்களது பயணத்தை தொடங்குவார்கள்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version