சினிமா

மகன்களால் கைவிடப்பட்ட நிலை!! ரஜினி கமல் பட நடிகை பிந்து கோஷ் மரணம்..

Published

on

மகன்களால் கைவிடப்பட்ட நிலை!! ரஜினி கமல் பட நடிகை பிந்து கோஷ் மரணம்..

80, 90களில் நடித்து பிரபலமான நடிகைகள் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அப்படி அந்த காலத்தில் காமெடி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஒருவர் மகன்களால் கைவிடப்பட்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கிறார்.நகைச்சுவையில் 80களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை பிந்து கோஷ். சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் பல பிரச்சனைகளை சந்தித்து, மருத்துவ செலவிற்கும் சாப்பிட பணம் இல்லை என்று நடிகை ஷகீலா அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்திருந்தார்.இதன்பின் KPY பாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருக்கு உதவிய நிலையில், சிகிச்சை பெற்று வந்த நடிகை பிந்து கோஷ் 76 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்திருக்கிறார். அவரது இறப்பிற்கு பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version