இலங்கை

யாழ் நாகவிகாரையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!.

Published

on

யாழ் நாகவிகாரையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!.

சிங்கள வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  சனிக்கிழமை (15.03.2025) இடம்பெற்றது. 

நாகவிகாரையின் விகாராதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்களுடன், வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  கலந்துகொண்டார். அத்துடன் 51ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியும் பங்கேற்றார்.

Advertisement

‘இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இவ்வாறான நிகழ்வுகள் அவசியம். இனரீதியான சிந்தனைக்கு அப்பால் மக்கள் என்ற ரீதியில் இப்படியான உதவிகள் வழங்கல்கள் தேவை’ என ஆளுநர் தனது உரையில் இங்கு குறிப்பிட்டார்.

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version