இந்தியா
ஆசியாவிலேயே 3-வது இடம், சம்பவம் செஞ்சு விட்ட தவெக.. அதகளம் ஆன எக்ஸ் தளம், மாஸ் பண்ணும் தளபதி!
ஆசியாவிலேயே 3-வது இடம், சம்பவம் செஞ்சு விட்ட தவெக.. அதகளம் ஆன எக்ஸ் தளம், மாஸ் பண்ணும் தளபதி!
விஜய் கட்சி ஆரம்பித்தது எக்ஸ் உரிமையாளர் எலான் மாஸ்கிற்கு லாபம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. எந்நேரமும் தமிழக வெற்றி கழகத்தின் பேச்சு தான் இந்திய அளவிலேயே ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
அப்படித்தான் நேற்று ஒரு சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார்கள் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர்கள்.
நேற்று எக்ஸ் ஸ்பேஸ் உருவாக்கி திமுகவின் ஊழல் பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் தமிழக வெற்றி கழகத்தின் ஐடி விங் .
கொஞ்ச நேரத்திலேயே கிட்டதட்ட 48 லட்சம் பேர் இந்த ஸ்பேஸ் பக்கத்தில் குவிந்திருக்கிறார்கள். எக்ஸ் ஸ்பேஸ் உருவாக்கி இத்தனை பேர் கலந்து கொண்டதில் இந்திய அளவில் தற்போது தமிழக வெற்றி கழகம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
அதேபோன்று ஆசியாவிலேயே மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. உலக அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
இதனால் தற்போது மீண்டும் TVK ஹேஷ்டாக் ட்விட்டரில் முதல் இடத்திற்கு வந்திருக்கிறது. சமூக வலைத்தளத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கு இதுவே பெரிய சான்று.