இலங்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

Published

on

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இன்று (17) நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சையில் 474,147 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

Advertisement

பரீட்சை ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பரீட்சையில் முறைகேடுகளைக் குறைப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version