சினிமா

ஜீ தமிழ் நிகழ்ச்சியில் திடீரென கண்கலங்கிய VJ மணிமேகலை.. வைரலாகும் வீடியோ

Published

on

ஜீ தமிழ் நிகழ்ச்சியில் திடீரென கண்கலங்கிய VJ மணிமேகலை.. வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் முக்கிய பிரபலமாக வலம் வந்த மணிமேகலை அந்த ஷோவில் VJ பிரியங்கா உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த சேனலை விட்டே வெளியேறிவிட்டார்.தற்போது ஜீ தமிழ் சேனலில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில், கடந்த வாரம் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் எபிசோடில் VJ மணிமேகலை கண்கலங்கி உடைந்து அழுதுள்ளார்.அப்போது பேசிய மணிமேகலை “நான் 8 ஆண்டுகள் Anchor-ஆ இருந்தேன். ஒரு காமெடி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இவங்க ஒரு Anchor, லீட் கொடுப்பாங்க, லிங்க் கொடுப்பாங்க, இவங்கள perform பண்ண விட்டா எப்படி பண்ணுவாங்க என்று பலர் ஏளனமாக பேசினர்.ஆனால் தற்போது மணிமேகலை சூப்பரா perform பண்ணுவாங்க, அவங்களுக்கு Anchoring வருமா என சொல்லும் அளவிற்கு நிலை மாறி உள்ளது.கடினமாக உழைத்தால் கண்டிப்பாக எது வேண்டும் என்றாலும் செய்யலாம்” என கண்கலங்கி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version