இந்தியா
புதுச்சேரி: புதிய மதுபான ஆலைக்கு எதிர்ப்பு – காங். எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு!
புதுச்சேரி: புதிய மதுபான ஆலைக்கு எதிர்ப்பு – காங். எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் பொது விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ ஆகியோர் புதிய மதுபான தொழிற்சாலைக்கும், புதிய மதுபான கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.இதுகுறித்து காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய மதுபான ஆலைக்கு முதலமைச்சர் அனுமதி அளிக்கிறார். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. புதிய மதுபான ஆலையால் நீர் ஆதாரம் பாதிக்கப்படும். எனவே ஆளுநரும் இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது.இதனால் புதுச்சேரிக்கு வருமானம் அதிகம் கிடைக்காது. புதிய மதுபான தொழிற்சாலை வரக்கூடாது என்பது தான் காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு எனக் கூறினார்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி