இலங்கை

அதானியின் திட்டத்தினை இரத்து செய்யக் கோரிய மனு மீள பெறப்பட்டுள்ளது!

Published

on

அதானியின் திட்டத்தினை இரத்து செய்யக் கோரிய மனு மீள பெறப்பட்டுள்ளது!

இந்திய அதானியின் இலங்கை காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டம் அமைக்கும் முடிவை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்து மீள பெறப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

 இந்திய நிறுவனமான அதானி, இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவருக்கு, சம்பந்தப்பட்ட திட்டத்தை மீள பெறுவதாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததாகக் கூறி, சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

 அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இதனுடன் தொடர்புடைய அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் மனுதாரர்களால் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மனுவை சுற்றுச்சூழல் நீதி மையம் உட்பட ஐந்து தரப்பினர் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version