இலங்கை
இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைது
இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைது
குருநாகல் – பௌத்தலோக பகுதியில் 50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற மதிப்பீட்டு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அறுதி காணி தொடர்பான பத்திரத்திற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தொகையை குறைப்பதற்காக இந்த இலஞ்ச பணத்தை கோரியுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் வடமேல் மாகாண சபையின் மாகாண வருமான திணைக்களத்தில் பணிபுரிந்த மதிப்பீட்டு அதிகாரி என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.