இலங்கை

சஞ்சீவ கொலை; பூஸா சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

Published

on

சஞ்சீவ கொலை; பூஸா சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

 நீதிமன்றில் சுட்டுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (17) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் கொழும்பு குற்றவியல் பிரிவினால் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

சந்தேகநபர் கடமை தவறியதன் காரணமாக இந்தக் குற்றம் நடந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் கையடக்க தொலைபேசி அழைப்புகளின் பதிவை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறும் நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version