இலங்கை

சுனிதா வில்லியம்ஸ் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் உலகம்;நேரடி ஒளிபரப்பு செய்ய நாசா தீர்மானம்

Published

on

சுனிதா வில்லியம்ஸ் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் உலகம்;நேரடி ஒளிபரப்பு செய்ய நாசா தீர்மானம்

 சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் 9 மாதங்களின் பின்னர் பூமிக்கு திரும்பவுள்ள நிலையில், அவரகள்து வரவை உலகமே ஆவலலுடன் எதிபார்த்து காத்திருக்கின்றது.

ஒரு வார காலம் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் , ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

Advertisement

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.

இதனையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா நிறுவனம் இணைந்து கடந்த 15 ஆம் திகதி விண்கலம் ஒன்றை அனுப்பியது.

நேற்று (17) இரவு 10.45 அளவில் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டது .

Advertisement

இந்த விண்கலம் இன்று (18) மாலை 5.57 அளவில் அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய நாசா தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version