இலங்கை

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த துணை மருத்துவ நிபுணர்கள்!

Published

on

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த துணை மருத்துவ நிபுணர்கள்!

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக துணை மருத்துவ நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Advertisement

குறித்த விடயத்தை சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் இணை அழைப்பாளர் உபுல் ரோஹன அறிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டு சபையைச் சேர்ந்த 7 தொழிற்சங்கங்களும் இடைக்கால மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணியைச் சேர்ந்த 11 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நிதியமைச்சின் அதிகாரிகளுடன் தமது பிரச்சினை தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் இணை அழைப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

Advertisement

எவ்வாறாயினும், இந்த வேலைநிறுத்தம் நியாயமற்றது என இணை சுகாதார நிபுணர்களின் கூட்டு அதிகார சபையின் இணை அழைப்பாளர் சலித் அமரதிவாகர தெரிவித்துள்ளார்.[ஒ] 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version