விளையாட்டு
பண்ட்டுக்கு சேட்டையை பாத்தீங்களா… கவாஸ்கர் போல் மிமிக்ரி செய்து கலாய் – வீடியோ!
பண்ட்டுக்கு சேட்டையை பாத்தீங்களா… கவாஸ்கர் போல் மிமிக்ரி செய்து கலாய் – வீடியோ!
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி விக்கெட் கீப்பர் வீரராக ஆடி வருபவர் ரிஷப் பண்ட். இவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். இந்த தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது. இந்தியாவின் டாப் ஆடர் வீரர்கள் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால், கேப்டன் ரோகித், கோலி உள்ளிட்டோருக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக, 2021 பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் ஹீரோவாக ஜொலித்த ரிஷப் பண்ட் 2024-ல் சிறப்பாக ஆடத் தவறினார். இந்த சூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே (4-வது) டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணிக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அப்போது, களத்தில் ஆடி வந்த பண்ட், எப்போதும் போலான ஸ்கூப் ஷாட் ஆடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அந்தப் போட்டியில், 2 முறை அந்த ஷாட்டிற்கு சென்று தவறவிட்ட பண்ட், 3-வது முறையும் விளையாட சென்று கேட்ச் கொடுத்து அவுட்டானார்.அப்போது, வர்ணனை பெட்டியில் இருந்த இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், ‘முட்டாள், முட்டாள், முட்டாள்’ என மூன்றுமுறை அழுத்தமாக கூறி பண்டை கடுமையாக சாடினார். இது தொடர்பான வீடியோ அப்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியது. “Stupid, stupid, stupid!” 😡🏏 Safe to say Sunny wasn’t happy with Rishabh Pant after that shot.Read more: https://t.co/bEUlbXRNpm💻📝 Live blog: https://t.co/YOMQ9DL7gm🟢 Listen live: https://t.co/VP2GGbfgge #AUSvIND pic.twitter.com/Fe2hdpAtVlவர்ணனைபெட்டியில் இருந்த கவாஸ்கர், முட்டாள், முட்டாள், முட்டாள் என மூன்றுமுறை அழுத்தமாக கூறி, “முந்தைய பந்தில் அந்த ஷாட்டை தவறவிட்டீர்கள், அதற்காகவே ஆஸ்திரேலியா இரண்டு ஃபீல்டர்களை அங்கு நிறுத்தியது. ஆனால் அதன்பிறகும் நீங்கள் அந்த ஷாட்டை விளையாடினீர்கள், இதுபோலான ஆட்டத்தை ஆடும் இடத்தில் இந்தியா இல்லை. அணியின் சூழ்நிலையையும் புரிந்துகொள்ள வேண்டும், இது உங்களுடைய இயல்பான ஆட்டம் இல்லை. நீங்கள் உங்களுடைய விக்கெட்டை கிஃப்ட்டாக கொடுத்துள்ளீர்கள். முட்டாள்தனமான ஷாட்டை விளையாடினீர்கள், நீங்கள் இந்திய டிரெஸ்ஸிங் அறைக்கு செல்லாமல், வேறு எங்காவது செல்லுங்கள்” என்று கடுமையாக சாடி இருந்தார். இந்த நிலையில், தற்போது சுனில் கவாஸ்கர் திட்டியதை அவரைபோலவே மிமிக்ரி செய்து பதிவிட்டுள்ளார் ரிஷப் பண்ட். இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கவாஸ்கர் வர்ணனையில் பேசியது போலவே, மிமிக்ரி செய்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரிஷப் பண்ட் பதிவிட்டுள்ளார் . Rishabh Pant recreating the ‘Stupid, Stupid, Stupid!’ of Sunil Gavaskar. 🤣pic.twitter.com/JhrK34luWh