உலகம்

போராட்ட களமாக மாறிய கோபகபானா கடற்கரை!

Published

on

Loading

போராட்ட களமாக மாறிய கோபகபானா கடற்கரை!

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றுமுன்தினம் கோபகபானா கடற்கரையில் திரண்டனர். 
 
அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்பாக , தனது பலத்தை வெளிப்படுத்தும் விதமாக போல்சனாரோ பிரபலமான கடற்கரையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்கு மில்லியன் கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
 
2023 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அன்று பிரேசிலின் தலைநகரில் நடந்த கலவரத்தில் தண்டனை பெற்ற நூற்றுக்கணக்கானவர்களுக்கு பொது மன்னிப்பு கோருவதே இந்தப் பேரணியின் நோக்கமாகக் கூறப்படுகிறது 
 
இதேவேளை சிறையில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு காங்கிரஸிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து ஜனாதிபதி மாளிகை, காங்கிரஸ் மற்றும் உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டனர்.
 
இப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரேசிலின் தேசிய கால்பந்து அணியின் ஜெர்சி அணிந்து கோஷமிட்டப்படி பதாகைகளை ஏந்திக் கொண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன 
 
ஜெய்ர் போல்சனாரோவுக்கு ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டத்தில் சுமார் 18,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version