இலங்கை
மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் யாழில் மரணம்!
மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் யாழில் மரணம்!
மனைவியை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். வவுனியா – மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.யோகராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
ஒரு பிள்ளையின் தந்தையான இவர் நீண்ட காலமாக மனைவியை பிரிந்து யாழ்ப்பாணத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு அருகாமையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். (ப)