பொழுதுபோக்கு

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பா? – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

Published

on

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பா? – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் மம்மூட்டி. இவர் தமிழில் ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மறுமலர்ச்சி, தளபதி, பேரன்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அடுத்ததாக மம்மூட்டி நடித்திருக்கும் “பசூக்கா” திரைப்படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தாண்டி தன்னுடைய அடுத்தடுத்த படங்களையும் கமிட் செய்து வைத்துள்ளார்.  73 வயதாகியும் இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து நடித்து வரும் மம்மூட்டி தற்போது, மகேஷ் நாராயணன் இயக்கி வரும் ‘MMMN’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.ஒரு வருடத்துக்கு 5 படம் என நடித்து வரும் மம்முட்டி, திடீரென நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துள்ளார் எனத் தகவல் வெளியாக, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு புற்றுநோய் உறுதியாகியுள்ளதாகவும் நேற்று வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவல்களுக்கு மம்முட்டியின் செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.மம்முட்டியின் செய்தி தொடர்பாளர், “இது பொய்யான செய்தி. அவர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருப்பதால் தான் விடுப்பு எடுத்திருக்கிறார். அதனால்தான் படப்பிடிப்புகளிலிருந்து ஒரு இடைவெளியும் எடுத்திருக்கிறார். இந்த இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கிறார்” எனக் கூறி பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.மம்முட்டி பூரண நலமுடன் இருப்பதாகவும், சமூக வலைதளத்தில் பரவும் தகவல்கள் வெறும் வதந்தியே என்றும் மம்முட்டி குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version