இலங்கை
மீனவர்கள் மாயம் தேடல்கள் தீவிரம்
மீனவர்கள் மாயம் தேடல்கள் தீவிரம்
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறைப் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறையில் இருந்து கடந்த 15ஆம் திகதி மாலை 3 மணியளவில் படகில் சென்ற இரு மீனவர்களே மீண்டும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.