இந்தியா

குஜராத்: பூட்டிய வீட்டில் ரூ.100 கோடி மதிப்பில் கட்டிக் கட்டியாக தங்கம், வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் பறிமுதல்!

Published

on

குஜராத்: பூட்டிய வீட்டில் ரூ.100 கோடி மதிப்பில் கட்டிக் கட்டியாக தங்கம், வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் பறிமுதல்!

அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட வீட்டில் வருவாய் புலனாய்வு பிரிவினர், தீவிரவாத தடுப்புப் படையினருடன் இணைந்து சோதனை நடத்த திட்டமிட்டனர்.அங்கு சென்ற குழுவினர், வீடு பூட்டப்பட்டு இருக்க அங்கு வசித்து வந்த மேக்ஷா என்பவரின் உறவினரிடமிருந்து சாவியைப் பெற்று சோதனையைத் தொடங்கினர். அதிரடியாக நடந்த இந்த சோதனையில் வீட்டின் உள்ளே 87.9 கிலோ தங்கக் கட்டிகள், 19.6 கிலோ தங்க நகைகள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள், ரூ.1.37 கோடி ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன.சிக்கிய பணத்தின் அளவு அதிகம் என்ற காரணத்தால், அதை எண்ணும் இயந்திரத்தை அதிகாரிகள் அங்கேயே கொண்டு சென்று பணத்தை எண்ணினர். உளவுத்துறை தகவல்கள் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது.இந்த வீட்டை மேக் ஷா என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். துபாய் பங்கு சந்தை முதலீட்டாளரான அவரின் தந்தை மகேந்திரா ஷா ஆகிய இருவருக்குமான நிதி பரிவர்த்தனைகள் போலி நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு இருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தீவிரவாத தடுப்பு படை டி.எஸ்.பி., சுனில் ஜோஷி என்றார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version