உலகம்

முழுமையான போர் நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்ய ஜனாதிபதி!

Published

on

முழுமையான போர் நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்ய ஜனாதிபதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான தொலைபேசி கலந்துரையாடலின் போது யுக்ரைனில் ‘உடனடி’ மற்றும் ‘முழுமையான’ போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்துள்ளார். 
 
எனினும் யுக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு மாத்திரம் ரஷ்ய ஜனாதிபதி ஒப்புக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அண்மையில் சவுதி அரேபியாவில் யுக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதியின் பிரதிநிதிகள் நடத்திய சந்திப்பின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாத கால போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி நிராகரித்துள்ளார். 
 
யுக்ரைனுக்கான வெளிநாட்டு இராணுவ மற்றும் உளவுத்துறை உதவிகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டால் மாத்திரமே போர் நிறுத்தத்தைச் செயற்படுத்த முடியுமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறிப்பிட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
எவ்வாறாயினும் யுக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் ஏற்கனவே இது போன்ற நிபந்தனைகளை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version