பொழுதுபோக்கு
நீக் முதல் ட்ராகன் வரை: இந்த வாரம் ஒடிடி தளத்தில் உங்கள் ஸ்பெஷல் எந்த படம்?
நீக் முதல் ட்ராகன் வரை: இந்த வாரம் ஒடிடி தளத்தில் உங்கள் ஸ்பெஷல் எந்த படம்?
திரையரங்குகளில் வெளியாகும் படங்களை விட வாரந்தோறும் ஒடிடி தளங்களில் வெளியாகம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வகையான ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில், ஹட்ஸ்டமார், அமேசான், நெட்ஃபிளிக்ஸ், உள்ளிட்ட பல்வேறு ஒடிடி தளங்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஒடிடி தளங்களில் வெளியாகும் புதிய படங்கள் குறித்து பார்ப்போம்.ட்ராகன்அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஷ்வரன் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ட்ராகன். கவுதம் மேனன், மிஷ்கின் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம், நாளை (மார்ச் 21) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்தனுஷ் இயக்கத்தில் 3-வதாக வெளியான படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். பவிஷ்,மாத்யு தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், இன்றைய இளைஞர்கள் மத்தியில் உருவாகும் காதல் மற்றும் நட்பை பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டது. இந்த படம் நாளை (மார்ச் 21) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.ஆபிஸர் ஆன் டியூட்டிமலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியான படம் ஆபிஸர் ஆன் டியூட்டி. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்த இந்த படத்தை, அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார். குஞ்சக்கோ போபன் உடன் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இன்று (மார்ச் 20) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.பேபி & பேபிபிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான படம் பேபி & பேபி. ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இத்திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.ரிங் ரிங்இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பிரவீன் ராஜ், விவேக், விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால், டானியல், அர்ஜுனன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ரிங் ரிங். திரைப்படம். விளையாட்டாக செய்த செயல் விபரீதமாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம்இப்படம் நாளை (மார்ச் 21) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.தினசரிஜி.சங்கர் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் சிந்தியா நடிப்பில் வெளியான படம் தினசரி. எம்.எஸ் பாஸ்கர், பிரேம்ஜி அமரன், சாம்ஸ், ராதா ரவி, மீரா கிருஷ்ணன், வினோதினி மற்றும் நடித்துள்ள இத்திரைப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.