இந்தியா

9 மாதங்களின் பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; பட்டாசு வெடித்துக் கொண்டாடிய இந்தியர்கள்!

Published

on

9 மாதங்களின் பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; பட்டாசு வெடித்துக் கொண்டாடிய இந்தியர்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் எதிர்பாராதவிதமாக 9 மாதங்கள் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் நேற்று பூமிக்குத் திரும்பியுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதை உலகமே கொண்டாடி வரும் நிலையில், அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் மேஹ்சானா மாவட்டம், ஜுலாசன் கிராமத்தில், அவர் பாதுகாப்பாக பூமி திரும்ப வேண்டும் என்று வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன் அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிவிட்டார் என்று செய்தி வெளியானதும் கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.

Advertisement

இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக நாசா தெரிவித்துள்ளது.
டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸுடன் சேர்த்து பட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கார்புனோவ் ஆகிய 4 வீரர்களும் பூமிக்கு பத்திரமாகத் திரும்பியுள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீரரான பிறகு மூன்று முறை, அதாவது 1972, 2007, 2013ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு குறிப்பாக அவரது சொந்த கிராமத்துக்கு வருகை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version