இலங்கை

உள்ளூராட்சித் தேர்தலில் 80 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டி

Published

on

உள்ளூராட்சித் தேர்தலில் 80 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டி

  2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களைச் சேர்ந்தவர்கள் என கிட்டத்தட்ட 80,000 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குழுவில் 107 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 49 சுயேட்சை குழுக்களும் போட்டியிடவுள்ளன.

Advertisement

இந்த தேர்தலில், 8,500 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் நேற்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்தது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதற்கிடையில், தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் அடுத்த வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version