இலங்கை

சுழிபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட உலக வாய்ச்சுகாதார தினம்!

Published

on

சுழிபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட உலக வாய்ச்சுகாதார தினம்!

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் உலக வாய்ச்சுகாதார தின நிகழ்வு சுழிபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் சிறப்பாக நடைபெற்றது.

உலக வாய்ச்சுகாதார நிகழ்வின் தொனிப்பொருளான “மகிழ்ச்சியான வாய் மகிழ்ச்சியான உள்ளம்” எனும் தொனிப்பொருளின் கீழ் சுழிபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட யா/காட்டுப்புலம் அ.த.க.பாடசாலையில் மாணவர்களிற்கான விசேட பற்சிகிச்சை முகாம், மற்றும் மாணவர்களிற்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் நடைபெற்றது. 

Advertisement

இதில் வளவாளர்களாக சுழிபுரம் பொது சுகாதார பரிசோதகர் ச. ஹஜேந்திரன், சங்கானை பிரதேச பாடசாலை பற்சிகிச்சையாளர் மற்றும் சுழிபுரம் கிழக்கு  குடும்பநல உத்தியோகத்தர் ஆகியோர் பங்குபற்றி பற்சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கருந்தரங்கினை வழங்கினர். 

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version