உலகம்

பிரான்ஸுடன் இணைந்த கனடா!

Published

on

பிரான்ஸுடன் இணைந்த கனடா!

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கனடாவின் புதிய பிரதமராகக் பதவியேற்றுள்ள மார்க் காணி கடந்த திங்கட்கிழமை பிரான்ஸுக்கு உத்தியோக பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளமை உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கனடாவின் புதிய பிரதமராகக் கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்ற மார்க் கார்னி தமது முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

Advertisement

இதன்போது அவருக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனினால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  ஜனாதிபதி மக்ரோனுடன் இணைந்து எலிசி அரண்மனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த  இம்மானுவல் மகரோன்;
பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பக்கம் கனடா இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் இதேவேளை கனடாவின் இறையாண்மையை பாதுகாப்பதே குறித்த பயணத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த பயணத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு,  வர்த்தகம், மற்றும் பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்துவது குறித்தும் பேசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version