சினிமா

புதிய கதைக்களத்தில் இறங்கிய அதர்வா..! ரெண்டான ‘இதயம் முரளி’ படத்தின் முதலாவது பாடல்!

Published

on

புதிய கதைக்களத்தில் இறங்கிய அதர்வா..! ரெண்டான ‘இதயம் முரளி’ படத்தின் முதலாவது பாடல்!

அதர்வா, கயாடு லோகர் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படமான “இதயம் முரளி”, ரசிகர்களிடம் உறுதியான இடத்தை பிடித்து வருகின்றது. இந்த படத்தை இயக்கும் ஆகாஷ் பாஸ்கர், இதற்கு முன் குறும்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் மூலம் மக்களின் மனங்களைக் கவர்ந்தவர்.இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான “இதயா நீ காதல் விதையா” தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. காதல், உணர்வு, இயற்கை மற்றும் இருவர்களின் உள்ளம் ஒன்றாகும் தருணங்களை இசை மூலம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.இந்த படத்தின் கதாநாயகனான அதர்வா பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை அமைத்துக் கொண்ட நடிகர். அவருடன் இளம் நடிகைகள் கயாடு லோகர் மற்றும் பிரீத்தி முகுந்தன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர்.’இதயம் முரளி’ குறித்த ஆரம்ப விளம்பரங்கள் அமைதியாக இருந்தபோதிலும், இந்தப் பாடல் வெளிவந்ததுடன் ரசிகர்களிடையே நல்ல சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாக அமைந்த இப் பாடல், படத்தின் ஒட்டுமொத்த கதையையும் கூறும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் “இதயா நீ காதல் விதையா” எனும் இந்த மெலடி பாடல், காதலை காதலாக சொல்லும் ஒரு அழகிய ஆரம்பமாக அமைந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version